தனுஷை பார்த்து அசந்து நின்ற ‘பிரேமம்’ நாயகி..!


தனுஷை பார்த்து அசந்து நின்ற ‘பிரேமம்’ நாயகி..!

பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கொடி’ என தனது அடுத்தடுத்த படங்களை நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

இந்த இரு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ‘கொடி’ படத்தில் த்ரிஷா, எஸ்ஏ சந்திரசேகர், பிரேமம் நாயகி அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்த அனுபமா, தனுஷின் நடிப்பை பார்த்து, பல சமயங்களில் அசந்தே போய்விட்டாராம்.

மேலும் நடிப்பு பற்றி நிறைய டிப்ஸ்களை தனுஷிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

அப்போ அனுபமாவோட பெட்டர் பெர்மான்ஸ் எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க…