ஜோதிகா-நயன்தாரா வேடத்தில் அனுஷ்கா-ஹன்சிகா..!


ஜோதிகா-நயன்தாரா வேடத்தில் அனுஷ்கா-ஹன்சிகா..!

ரஜினிகாந்த்-பி. வாசு-பிரபு கூட்டணியில் உருவான படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் பெரும் சாதனைகளை இப்படம் படைத்தது.

இதில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, நாசர், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

இந்நிலையில் இதன் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகா, நயன்தாரா வேடத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் ஹன்சிகாவை அணுகவுள்ளதாக கூறப்படுகிறது.

கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.