விஜய் பட ரீமேக்… நயன்தாராவுக்கு பதிலாக அனுஷ்கா…!


விஜய் பட ரீமேக்… நயன்தாராவுக்கு பதிலாக அனுஷ்கா…!

லைக்கா தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி, தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது.

அனிருத் இசையமைத்த இப்படத்தில், விஜய்யுடன் சமந்தா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறது லைகா. இந்நிறுவனத்துடன் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படம் சிரஞ்சீவியின் நடிப்பில் 150வது படமாக உருவாகவிருக்கிறது.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பல கோடிகளை கேட்டதால், தற்போது அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.