அஜித்தால் ‘அப்புக்குட்டி’ சிவபாலனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!


அஜித்தால் ‘அப்புக்குட்டி’ சிவபாலனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. அவர்களில் அப்புக்குட்டியும் ஒருவர். இதனைத் தொடர்ந்து இளையராஜா இசையமைத்த ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்றார் இவர்.

அஜித்தின் ‘வீரம்’ படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் சிவா இயக்கும் ‘தல 56 படத்திலும் அப்புக்குட்டி நடிக்கிறார். அப்போது வாய்ப்புக்கள் இன்றி தவிக்கும் அப்புக்குட்டியை வைத்து விதவிதமான கோணங்களில் ஒரு அழகான போட்டோ ஷுட் எடுத்தார் அஜித். அந்த போட்டோக்களை ஜூன் 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். அவை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாக பரவியது. மேலும் அப்புக்குட்டியின் இயற்பெயரான சிவபாலன் என்ற பெயரையே இனி அழைக்குமாறு அஜித் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் அப்புக்குட்டி சிவபாலனின் புகைப்படங்களுக்கு ஏற்பட்ட வரவேற்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவரின் புதிய கெட்டப், புதிய லுக் ஆகியவற்றை பார்த்த இயக்குனர்கள் அப்புக்குட்டிக்கு (ஸாரி) சிவபாலனுக்கு வாய்ப்பளித்துள்ளனர். புதிதாக இரு படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளாராம். அதிலும் முக்கியமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

அஜித் கை பட்டால் எல்லாம் அழகுதான் போல…