இளையராஜா பற்றிய கேள்விக்கு டென்ஷனான ரஹ்மான்!


இளையராஜா பற்றிய கேள்விக்கு டென்ஷனான ரஹ்மான்!

தமிழ் இதயங்களை மட்டுமல்ல இசையை நேசிக்கும் அனைத்து இதயங்களையும் தன் இசையால் தாலாட்டி வருபவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான். இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டார்.

அச்சந்திப்பின்போது பெர்க்லி இசை கல்லூரி தலைவர் பிரெளன், இசையமைப்பாளர் ரகுமான் பற்றி கூறியதாவது…

“ஏ.ஆர். ரஹ்மானின் இசைச்சேவையை கவுரவிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரத்தி்ல் உள்ள பெர்க்லி இசை கல்லூரி ரஹ்மான் பெயரில் உதவித்தொகை வழங்க உள்ளது. பெர்க்லி கல்லூரியில் சேரும் இந்திய மாணவருக்கு இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ரஹ்மான் பதிலளித்தார். அப்போது ஒரு நிருபர் “நீங்கள்தான் அடுத்த இளையராஜாவா? இதை கேட்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்றார். அதற்கு ரஹ்மான் பதிலளிக்கையில்…“இளையராஜாவுக்கு நிகர் அவரேதான். இனி அப்படி சொல்லாதீர்கள். கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டு என்னிடமிருந்து எதையாவது பதிலாகப் பெற்று விடலாம் என்ற நினைப்பை அகற்றி விடுங்கள்” என்று சற்று கோபமாகவே பதிலளித்து சென்றார் ரஹ்மான்.