ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..!


ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..!

இந்திய திரையுலக கலைஞர்களின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவர் ஏஆர் ரஹ்மான்.

ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் இவர்.

மேலும் கிராமிய விருதுகள் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி ஜப்பானில் உள்ள ஒரு அமைப்பு புகுவோகா விருதை இவருக்கு வழங்குகிறது.

ஆசியாவில், சிறந்த விளங்கும் கலைஞர்களை கௌரவிக்க இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related