இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் அடுத்த அவதாரம்..!


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் அடுத்த அவதாரம்..!

ஏ.ஆர். ரஹ்மான்… இதுநாள் வரை இவரை ஒரு பாடகராக, இசையமைப்பாளராகவே மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

இவர் தயாரிக்கவிருக்கும் முதல் படத்திற்கு ’99 பாடல்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்போதே அதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டாராம்.

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ள இப்படத்தில் இமான் பட் மற்றும் டென்ஷிங் டாலா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். மற்ற கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Related