ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் சூர்யாவின் ‘24’


ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் சூர்யாவின் ‘24’

சூர்யாவின் ‘24’ என்ற படத்திற்கு தான் இசையமைக்க போவதாக ஏ.ஆர்.ரகுமான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை ‘யாவரும் நலம்’ புகழ் விக்ரம் குமார் இயக்கவிருக்கிறார்.

சூர்யா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா, ப்ரணிதா நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யாவின் ‘24’ படத்திற்கான வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

ஆயுதஎழுத்து, சில்லுனு ஒரு காதல் வரிசையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் சூர்யாவின் 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.