அரண்மனை ஜோடிகளை பாசமலர்களாக மாற்றிய சுந்தர் சி.


அரண்மனை ஜோடிகளை பாசமலர்களாக மாற்றிய சுந்தர் சி.

கடந்தாண்டு 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை ரசிகர்கள் பயமுறுத்தி நன்றாகவே கல்லா கட்டியது. இதனைத் தொடர்ந்து அவர் அரண்மனை 2 படத்தை இயக்கி வருகிறார். எனவே இப்படம் அப்படத்தின் இரண்டாம் பாகமாக கருதப்பட்டு வந்தது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சுந்தர் சி. மேலும் அவர் கூறியதாவது.. ‘அரண்மனை’ படத்திற்கும் தற்போது உருவாகியுள்ள ‘அரண்மனை 2′ படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ‘அரண்மனை’ படத்தில் மனோபாலா, கோவை சரளா இருவரும் ஜோடிகளாக நடித்திருந்தனர். ஆனால் புதிய படத்தில் இருவரும் பாசமலர்களாக அதாவது அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, சதீஷ், மனோபாலா, கோவை சரளா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தமிழக உரிமையை பெற்றுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை ஜனவரி 29ஆம் தேதி வெளியிடுகிறது.