தீபாவளிக்கு வெளியாகும் ‘அரண்மனை 2′ சிங்கிள் ட்ராக்!


தீபாவளிக்கு வெளியாகும் ‘அரண்மனை 2′ சிங்கிள் ட்ராக்!

இன்னும் சில தினங்களில் தன் ரசிகர்களுக்கு தரிசனம் தரவிருக்கிறார்கள் கமல்ஹாசன் மற்றும் அஜித். இவர்களின் தூங்காவனம் மற்றும் வேதாளம் படங்கள் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கின்றன.

இதனிடையில் சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை 2′ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துவிட்டதால் இப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. எனவே இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது…

“சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை 2′ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடவிருக்கிறோம். ஆனால் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை மட்டும் (சிங்கிள் ட்ராக்) தீபாவளி தினத்தில் வெளியிடவிருக்கிறோம்” என்றார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் சுந்தர் சி, த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போல இப்படத்தையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் எனத் தெரிகிறது.