மீண்டும் வில்லனாக அருண் விஜய்… ஹீரோ சூப்பர் ஸ்டார்?


மீண்டும் வில்லனாக அருண் விஜய்… ஹீரோ சூப்பர் ஸ்டார்?

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘ப்ரேமம்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் அல்போன்ஸ் புத்திரன். அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இது ‘என்னை அறிந்தால்’ படம் போன்ற பவர்புல்லான வில்லன் வேடமாம் இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கவனித்தக்கது.

அல்போன்ஸ் புத்திரன் மற்றும் அருண்விஜய் இணையும் புதிய படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால் அல்லது மம்மூட்டி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடான பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறதாம்.