அஜித்துடன் மோதிய அருண்விஜய்… இப்போ அவர் வழிக்கே வந்துட்டாரே..!


அஜித்துடன் மோதிய அருண்விஜய்… இப்போ அவர் வழிக்கே வந்துட்டாரே..!

தனி ஹீரோவாக வலம் வந்த அருண்விஜய், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்திற்காக வில்லனாக மோதினார்.

அப்படத்தில் அஜித் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தன் புதிய படத்திற்காக முதன்முறையாக அருண் விஜய்யே போலீஸ் வேடம் ஏற்க இருக்கிறாராம்.

‘ஆறாது சினம்’ படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கும் படத்தில் தான் இந்த போலீஸ் அவதாரம்.

இப்படத்தை தன் சொந்த நிறுவனமான  ‘ஐஸ்-இன் சினிமாஸ் எண்டெர்யின்மெண்ட்’  மூலம் தயாரிக்கிறார்.

மெடிக்கல் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.