சூர்யா, விஷால், தனுஷ் போல நாங்களும் செய்வோம்.. களம் இறங்கிய அருண் விஜய்..!


சூர்யா, விஷால், தனுஷ் போல நாங்களும் செய்வோம்.. களம் இறங்கிய அருண் விஜய்..!

ரஜினி, சத்யராஜ், சரத்குமார், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் வில்லனாக நடித்து நாயகன் ஆனார்கள். ஆனால் முதல் படத்திலேயே பிரம்மாண்ட நாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய்.

பல படங்களில் இவர் நாயகனாக நடித்தாலும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து பெரும் புகழைத் தட்டிச் சென்றார்.

தற்போது ‘ஆறாது சினம்’ படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கவுள்ள படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்திருக்கிறார். ‘ஐஸ்-இன் சினிமாஸ் எண்டெர்யின்மெண்ட்’ என்ற பெயரிப்பட்டுள்ள இந்நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறாராம்.

சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட ஹீரோக்கள் படங்களை தயாரித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் வரிசையில் அருண் விஜய்யும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.