அருள்நிதியை அடுத்து அருண் விஜய்யுடன் அறிவழகன்.!


அருள்நிதியை அடுத்து அருண் விஜய்யுடன் அறிவழகன்.!

‘ஈரம்’ அறிவழகன் இயக்கி வரும் படம் ‘ஆறாது சினம்’. இது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜீத்து ஜோசப்பின் ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக் என்பது நாம் அறிந்ததே.

இப்படத்தில் அருள்நிதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ரோபோ சங்கர், ராதாரவி, சார்லி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தயாரிப்பு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

இதனைத் தொடர்ந்து ஆக்‌ஷன், த்ரில்லர் பாணியிலான ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம் அறிவழகன். இதில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

மேலும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அருண்விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.