அருண் விஜய்-அறிவழகன் கூட்டணியில் விஷால்..!


அருண் விஜய்-அறிவழகன் கூட்டணியில் விஷால்..!

அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்ததை தொடர்ந்து பல்வேறு பாராட்டுக்களும் வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அவரும் நிதானமாக தன்னை தேடி வரும் வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு வருகிறார்.

தற்போது மீண்டும் ஹீரோவாக களம் இறங்குகிறார். விரைவில் ஆறாது சினம் படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்காக மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெறும் வேளையில், இதில் இசையமைக்க விஷால் சந்திரசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது… எனது முந்தைய படமான ஜில் ஜங் ஜக் படத்திற்கு பல பாராட்டுக்கள் கிடைத்தன. இந்தப் படம் வேறு மாதிரியான கதைக்களம். எனவே இசையும் புது மாதிரியாக இருக்கும்” என்றார்.