மீண்டும் இணையும் ‘தனி ஒருவன்’ ஜெயம்ரவி மற்றும் அர்விந்த் சாமி.!


மீண்டும் இணையும் ‘தனி ஒருவன்’ ஜெயம்ரவி மற்றும் அர்விந்த் சாமி.!

சமீப காலமாக, ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களை கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மிருதன் படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். இதிலும் ஜெயம் ரவியின் ஜோடியாக ஹன்சிகாவே நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ‘போகன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கான போட்டோ ஷூட்  அடுத்த வாரம் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதில் முக்கிய கேரக்டரில் அரவிந்த் சாமி நடிக்கிறாராம். இவர்கள் இதற்கு முன்பு இணைந்த ‘தனி ஒருவன்’ படம் பெரும் ஹிட்டடித்தது.

எனவே, மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இமான் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு அடுத்த மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.