சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா..?


சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா..?

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் காமெடி திரைப்படங்களை கொடுத்து வருபவர் சுந்தர் சி. இவர் சமீபகாலமாக பேய் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

ஆனால் அண்மையில் வெளியான அரண்மனை 2, ரசிகர்களை அதிகம் பயமுறுத்தவில்லை. எனவே மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்புகிறார்.

எனவே, கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறாராம்.

முதல் பாகத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் ஆர்யா, நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.