ஆர்யாவிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஜிவி. பிரகாஷ்!


ஆர்யாவிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஜிவி. பிரகாஷ்!

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படப்பிடிப்புன் போது ஆனந்தியுடன் ஜிவி. பிரகாஷ் கடலை போட்டதாக கலாய்த்துள்ளார் ஆர்யா.

தனது முதல் படமான ‘வெயில்’ படத்திலேயே அனைவரையும் தன் இசையால் தாலாட்டியவர் ஜி.வி. பிரகாஷ். தொடர்ந்து இசையின் நாயகனாக வளர்ந்து முன்னணி இசையமைப்பாளர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் ரஜினி நடித்த ‘குசேலன்’, விஜய் நடித்த ‘தலைவா’ உள்ளிட்ட படங்களில் கௌரவ வேடத்தில் தோன்றினார். இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வரவே ‘பென்சில்’ படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் ஜோடியாக நடித்தார். ஆனால் அதற்கு முன்பே ‘டார்லிங்’ படம் முந்திக் கொண்டு வெளியானது. படம் ஹிட்டடிக்கவே ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ப்ரியா ஆனந்தை தொடர்ந்து தற்போது இப்படத்தில் ஆர்யாவும் இணைந்துள்ளார். படப்பிடிப்பின் போது ‘பிட் படம் டி…’ என்ற பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆடிய ஆட்டத்தை நேரில் பார்த்தாராம் ஆர்யா.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்த ஆர்யா கூறியதாவது… “‘‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் நானும் நடித்துள்ளேன். மறக்கமுடியாத அனுபவம் அது. ‘பிட் படம் டி…’ பாடலுக்கு ஜி.வி. டான்ஸ் சூப்பராக இருந்தது. படப்பிடிப்பு செட்டில் அவர் ‘கயல்’ ஆனந்தியுடன் கடலை போட்ட போது கையும் களவுமாக பிடித்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

 கடல போடுறதுல ஆர்யாவ மிஞ்சிடுவீங்க போலருக்கே..!