ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் கைகொடுப்பாரா?


ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் கைகொடுப்பாரா?

மதராசப்பட்டினம், நான் கடவுள், பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் ஆர்யா. ஆனால், இவ்வருடம் (2015) ஆர்யாவுக்கு ராசியில்லாத ஆண்டாக அமைந்து விட்டது. இவ்வருடம் வெளியான புறம்போக்கு, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் வெற்றிப் பெறவில்லை.

தற்போது பாலா இயக்கும் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இதனையடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜீவா தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ஆர்யா. இப்படத்தை மஞ்சப்பை இயக்குனர் ராகவன் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் தொடர் தோல்வி படங்களால் துவண்ட ஆர்யா, மற்ற ஹீரோக்களை போல ரஜினி படத்தை தேர்வு செய்து இருக்கிறார். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ நடித்த ‘பாண்டியன்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம் ஆர்யா. இப்படத்தை ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ என்ற படத்தை இயக்கிய சுராஜ் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஹ்ம்… ரஜினியாவது ஆர்யாவுக்கு கைகொடுப்பாரா என பார்க்கலாம்!