‘தனுஷைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்’ – விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.!


‘தனுஷைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்’ – விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.!

கவிஞர் பா விஜய்யுடன் இளைய தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்து நடித்துள்ள படம் ‘நையப்புடை’.

விஜய் விக்ரம் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் வெங்கடேஷ், பொன்ராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். டீசரை ஆர்யா வெளியிட்டார்.

இவ்விழாவில் ஆர்யா பேசியதாவது… பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியவர் சந்திரசேகர் சார்.

பெரிய ஸ்டாரின் தந்தை அவர். அவர் என்னை இந்த விழாவுக்கு அழைத்தது எனக்கு பெருமை” என்றார்.

பின்னர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது…

இப்படத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக நடித்துள்ளேன். எனக்கு சண்டைக்காட்சிகளும் உள்ளது. இதன் இயக்குனர் மிகவும் துடிப்பானவர்.

நான் தனுஷ் நடித்துவரும் ‘கொடி’ படத்திலும் நடித்து வருகிறேன்.

தனுஷ் பார்க்கத்தான் அமைதியாக சின்னப்பையன் போன்று இருப்பார். அவர் நடிப்பதே தெரியாது. அவ்வளவு யதார்த்தமாக நடிப்பார்.

அவரைப் பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்” என்றார்.