ஆர்யா-சித்தார்த்-சமந்தா நடிக்க, தமிழில் ‘பெங்களூர் டேஸ்’


ஆர்யா-சித்தார்த்-சமந்தா  நடிக்க, தமிழில் ‘பெங்களூர் டேஸ்’

மலையாளத்தில் சென்ற வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். இன்றைய இளைய சமூகத்திற்கு தகுந்தாற்போல், நடக்கின்ற சம்பவங்களை கண்முன் கொண்டு வந்த படம்.

மம்முட்டி மகன் துல்கர் சல்மான், இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசில், நேரம் பட நாயகன் நிவின் பாலி, நஸ்ரியா நஸீம், பார்வதி மேனன் (இவர்களுக்கு அடையாளம் தேவையில்லை என நினைக்கிறோம்) ஆகியோர் நடித்த இப்படத்தை அஞ்சலி மேனன் எழுதி இயக்கியிருந்தார்.

தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. பி.வி.பி. சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தில் ராஜுவும் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கில் தயாரிக்கவுள்ளார்கள்.

இயக்குனர் பாஸ்கர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கவுள்ளார். பஹத் பாசில்-நஸ்ரியா கேரக்டரில் சித்தார்த், சமந்தா நடிக்க, துல்கர் சல்மான்-பார்வதிமேனன் கேரக்டரில் ஆர்யா-நித்யா மேனன் நடிக்க, நிவின் பாலி நடித்த கேரக்டரில் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.