த்ரிஷா, ஹன்சிகாவின் முன்னாள் காதலை கலாய்த்த ஆர்யா!


த்ரிஷா, ஹன்சிகாவின் முன்னாள் காதலை கலாய்த்த ஆர்யா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் த்ரிஷாவும் ஹன்சிகாவும் முக்கியமானவர்கள். இருவரும் தற்போது ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். சுந்தர் .சி இயக்கி வரும்  ‘அரண்மனை-2’ படத்தில்  இவர்களுடன் சித்தார்த், பூனம் பஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் த்ரிஷா இணைந்துள்ளார். இருவரும் முன்னணி நடிகைகள் என்பதால் பிரச்சினைகள் வரக்கூடும் என படக்குழுவினர் பயந்தனர். ஆனால் படப்பிடிப்பில் இவர்கள் நடந்து கொண்ட விதம் அனைவரையும் மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாம்.

இப்படத்தில் த்ரிஷா இணைந்தது குறித்து நடிகை ஹன்சிகாவிடம் கேட்டதற்கு… “நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டோம். ஈகோ இல்லை. எனக்கு ஒரு நல்ல சகோதரி கிடைத்துள்ளார்” என்றார்.

இந்நிலையில் ஹன்சிகா தன் ட்விட்டர் பக்கத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் ‘இது அக்கா-தங்கையின் காதல்’ என்று பதிவு செய்திருந்தார். இதற்கு பதிலளித்த ஆர்யா… “இந்த காதல் நிச்சயம் பிரியாமல் இருக்கும். எனவே, நீங்கள் இப்படியே இருப்பதுதான் மிகவும் நல்லது” என்று கலாய்த்துள்ளார்.

சிலநாட்களுக்கு முன்பு வருண்மணியனுடன் த்ரிஷாவின் காதல் முறிந்தது. அதுபோல சிம்புவுடன் ஹன்சிகாவின் காதலும் முறிந்துபோனது. எனவே இவர்களின் முன்னாள் காதலை வைத்துதான் ஆர்யா இப்படி கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.