தாய்மொழி மலையாளத்திலும் படம் தயாரிக்கும் ஆர்யா


தாய்மொழி மலையாளத்திலும் படம் தயாரிக்கும் ஆர்யா

ஆர்யா, தற்போதைய தமிழ் சினிமாவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், கதாநாயகிகளின் “பிரியாணி விருந்து” நண்பராகவும் இருப்பவர். ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர் மறுபுறம் ‘தி ஷோ பீப்பிள்’ என்ற தனது சொந்த பட நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். சமீபத்தில் தனது தம்பி சத்யா நடிப்பில் வெளிவந்த அமரகாவியம் இவரது தயாரிப்புதான்.

இந்நிலையில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ஜீவா’ ஆகிய திரைப்படங்களையும் வாங்கி வெளியிட்டார். தற்போது மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ், சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள “ஆகஸ்ட் சினிமா” என்ற பட நிறுவனத்தில் பார்ட்னர்  ஆக இணைந்துள்ளார். இந்த நிறுவனம் தற்போது ‘டபுள் பேரல்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. பிருத்விராஜ், ஆர்யா, இந்திரஜித், சுவாதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தமிழை தொடர்ந்து மலையாளத்தில் ஆர்யா தயாரிப்பாளர் ஆகியுள்ளார். ஆர்யாவின் தாய்மொழி மலையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.