விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயனை திருப்பும் ஆஸ்கர் ரவி!


விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயனை திருப்பும் ஆஸ்கர் ரவி!

‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலமாக திரையுலகுக்கு விநியோகஸ்தராக அறிமுகமானவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். பின்னர் ‘வானத்தை போல’ படத்தின் மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். ‘அந்நியன்’, ‘தசாவதாரம்’, ‘ஐ’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வெளியிட்ட இவர் தற்போது ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடிக்க ‘பூலோகம்’ படத்தை தயாரித்து வருகிறார்.

இவரது சமீபத்திய படங்களுக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் போனதால் இவரது சொத்துக்களை அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன. இதற்கிடையில் நடிகர் விஜய் இவரது தயாரிப்பில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார். தற்போது ஆஸ்கார் ரவியின் பொருளாதார நிலைமை சரியில்லை என்பதால் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து வருகிறாராம்.

இதனால் ஆஸ்கார் ரவி ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார். விஜய் ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயனை வளர்த்துவிட முடிவு செய்து சிக்கலில் தவிக்கும் ரஜினிமுருகன் படத்தை வாங்கி தன் பேனரில் வெளியிட இருக்கிறார். இதன்கூடவே லிங்குசாமியிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம். “சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தின் மீது நீங்கள் வாங்கிய கடன்களை அடைத்துவிட்டு வாருங்கள். பின்பு நீங்கள் சொல்லும் விலையை நான் வாங்கி கொள்கிறேன். விஜய் பட விலை என்றாலும் தர தயாராக இருக்கிறேன்” என்றாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.