“தொல்லைக்காட்சி”க்காக இணையும் அஸ்வின்-ஜனனி..!


“தொல்லைக்காட்சி”க்காக இணையும் அஸ்வின்-ஜனனி..!

வேதாளம் புகழ் அஸ்வின் “தொல்லைக்காட்சி” படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜனனி நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, மயில்சாமி, சுப்பு அருணாச்சலம், ஆதவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரபல இயக்குனர்கள் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எம். சாதிக் கான் இப்படத்தை இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாடல்களை நா.முத்துகுமார் எழுத தரண் இசையமைக்கிறார்.

கயலாலயா நிறுவனம் மூலம் பாலாசெந்தில் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.