அஸ்வினின் குணத்தை மாற்றிய தொ(ல்)லைக்காட்சி..!


அஸ்வினின் குணத்தை மாற்றிய தொ(ல்)லைக்காட்சி..!

அஸ்வின், ஷிவதா நடித்து அண்மையில் வெளியான ‘ஜீரோ’ ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

வித்தியாசமான படைப்புகளுக்கு எப்போதும் ரசிகர்களின் துணை இருக்கும் என்பதை இந்த வெற்றி உணர்த்தியது.

இந்த ஜீரோவை தொடர்ந்து இதன் ஹீரோ அஸ்வின் நடித்து வரும் படம் ‘தொல்லைக்காட்சி’. இவருடன் ஜனனி ஐயர், ஆதவன், சுபு பஞ்சு, கலைராணி, மனோபாலா, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தரண் குமார் இசையமைக்க, பாலசெந்தில் ராஜா தயாரித்துள்ளார்.

AR முருகதாஸ் மற்றும் லிங்குசாமி ஆகியோரிடம் பணிபுரிந்த சாதிக் கான் இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து நாயகன் அஸ்வின் கூறியதாவது…

‘இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி (டிவி) மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்று. சிலநேரம் இது மனிதனின் குணத்தையே மாற்றுகிறது.

சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு மோசமான சூழ்நிலையையும் இது ஏற்படுத்தி விடுகிறது என்பதே இப்படம்.

நான் ஜோதிடத்தின் மேல் அதிக நம்பிக்கை உள்ளவனாக நடித்திருக்கிறேன். இப்படம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்” என்றார்.