கலப்பு திருமணம் செய்து கொள்ள போகும் அசின்!


கலப்பு திருமணம் செய்து கொள்ள போகும் அசின்!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அசின், கஜினி படத்தின் ரீமேக் மூலம் இந்திக்கு சென்று அங்கேயே செட்டிலானார். அப்போது தொழிலதிபரான மைக்ரோ மேக்ஸ் ராகுல் சர்மாவை சந்தித்து காதல் கொண்டார்.

தற்போது இவர்களின் காதல் திருமணம் வருகிற 20ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இத்திருமணம் இரண்டு நாள் விழாவாக நடக்கவிருக்கிறதாம்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர்.

இத்திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களின் முறைப்படி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 23ஆம் தேதி மும்பையில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது.