திருமண உடை வாங்க லண்டன் சென்ற அசின்!


திருமண உடை வாங்க லண்டன் சென்ற அசின்!

சில வருடங்களுக்கு முன் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்களின் ஆஸ்தான நாயகி அசின்தான். இதனால் ரசிகர்களும் அசினை ஆராதித்து வந்தனர். இதனால் முன்னணி நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்த அசின் ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் இந்தி பட உலகுக்கு சென்றார்.

அங்கும் ‘கஜினி’ வெற்றி பெற்வே சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்தார். அதன்பின்னர் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இறுதியாக நடித்த ‘ஆல் இஸ் வெல்’ படமும் இவருக்கு ‘வெல்’ ஆக அமையவில்லை.

இதனிடையில் மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனர் ராகுல் சர்மாவை காதலித்தார். எனவே தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நடக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, திருமணத்திற்கான உடைகள் மற்றும் தங்க, வைர நகைகள் உள்ளிட்டவைகளை தேர்வு செய்ய லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கும் சில பொருட்களை வாங்கவிருக்கிறாராம் அசின்.