‘ரஜினி, டி.ஆரிடம் முதல்ல கேளுங்க…’ கடுப்பான கங்கை அமரன்!


‘ரஜினி, டி.ஆரிடம் முதல்ல கேளுங்க…’ கடுப்பான கங்கை அமரன்!

சிம்பு பாடி சமீபத்தில் இணையங்களில் வெளியான பீப் சாங் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் இப்பாடல் குறித்து இளையராஜாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கருத்து கேட்க அதற்கு அவரது பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே இதுகுறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஃபேஸ்புக் பதிவில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

“இளையராஜா போன்ற இசை பெரியோர்களிடம் எதைப் பற்றி கேட்க வேண்டும் என்ற வரம்பு வேண்டும். அவர் இசையமைத்த பாடல்களையே அவரே கேட்டு நான் பார்த்ததில்லை.

இதில் இந்த பசங்க போட்ட பாட்டு பத்தி எல்லாம் அவர்கிட்ட கேட்கிறீங்க. ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன்தானே அந்த அனிருத். ரஜினிகிட்ட போய் கேளுங்க. தமிழ் தமிழ்னு உசுர விடுறாரே? சிம்புவின் அப்பா டி.ஆர். முதல்ல அவங்ககிட்ட அபிப்ராயம் என்னன்னு கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பத்திரிகை நண்பர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதில்… “என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே, உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.