மணிரத்னம் இயக்கத்தில் அதர்வா… காரணம் என்ன தெரியுமா..?


மணிரத்னம் இயக்கத்தில் அதர்வா… காரணம் என்ன தெரியுமா..?

ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் படம் குறித்த பல தகவல்கள் வெளியாகின.

தற்போது பல பிரச்சினைகளுக்கு பிறகு கார்த்தி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதர்வா நடிக்கவிருக்கும் ஒரு படத்தையும் மணிரத்னம் இயக்கக்கூடும் என கூறப்படுகிறது. மணிரத்னத்தின் முதல் படமான பகல்நிலவு படத்தில் நடித்தவர் அதர்வாவின் தந்தை முரளி என்பது இங்கே கவனித்தக்கது.

எனவே மணிரத்னம் தன் முதல் ஹீரோவின் மகனை இயக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.

பரதேசி, ஈட்டி, கணிதன் படத்திற்கு பிறகு அதர்வாவின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இவர் மணிரத்னத்துடன் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.