குட்டி பதினாறு அடி பாயும்… அப்பாவுக்கு நிரூபித்த அதர்வா…!


குட்டி பதினாறு அடி பாயும்… அப்பாவுக்கு நிரூபித்த அதர்வா…!

ஈட்டி, கணிதன் என சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து ருக்மணி வண்டி வருது என்ற படத்தில் நடித்து வருகிறார் அதர்வா.

இதில் அதர்வாவுடன் பூஜா ஜாவேரி, தம்பி ராமையா, எஸ்பிபி சரண், போஸ்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜா மோகன் இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார் அதர்வா.

இப்படத்திற்கு ‘செம போத ஆகாத’ என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார். இப்படம் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய பத்ரி வெங்டேஷிற்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதர்வாவின் தந்தை முரளி, பல படங்களில் நடித்தாலும் தயாரிப்பில் இறங்கவில்லை. ஆனால் அதர்வா 10 படங்களை கூட முடிக்காத நிலையில் தயாரிப்பு துறையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அட புலி எட்டு அடி பாஞ்சா குட்டி பதினாறு பாயும் என்பது சரியாத்தான் இருக்கு.