3 நாட்கள் தண்ணீர் குடிக்காமல் சிக்ஸ்பேக் வைத்த அதர்வா!


3 நாட்கள் தண்ணீர் குடிக்காமல் சிக்ஸ்பேக் வைத்த அதர்வா!

மைக்கேல் ராயப்பன் தயாரித்து அதர்வா நடித்திருக்கும் படம் ‘ஈட்டி‘.  அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், சோனியா, அஸ்வின் ராஜா, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. விழாவின் நாயகி ஸ்ரீதிவ்யா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் ‘ஈட்டி’ நாயகன் அதர்வா பேசியதாவது

ப்படத்தின் கதையை படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த கதையில் வெற்றிமாறனின் பங்களிப்பு இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். ரவி அரசு மிக அருமையான இயக்குர். இப்படத்திற்காக சிக்ஸ்பேக் வைக்க டயட்டில் இருந்தேன். இதனால் சில நேரங்களில் கண் மங்கலாகவே தெரிந்தது. கேமரா கூட சரியாக தெரியவில்லை” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குர் வெற்றிமாறன் பேசியதாவது…
இந்த ஈட்டி படத்தை முதலில் நான்தான் தயாரிக்கவிருந்தேன். ஆனால் பின்னர் தாணு சாரிடம் சென்று அதன்பின்னர் மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். நல்லவேளை நான் தயாரிக்கல. கண்டிப்பாக இப்படத்தை நான் இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்து இருக்க மாட்டேன். படத்தின் நாயகன் அதர்வாவின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். சிக்ஸ்பேக் வைப்பதற்காக மூன்று நாட்கள் முழுவதும் தண்ணீர் அருந்தாமல் உழைத்திருக்கிறார்” என்றார்.