விஜய் படத்திற்காக ஷங்கரை காப்பியடிக்கும் அட்லி!


விஜய் படத்திற்காக ஷங்கரை காப்பியடிக்கும் அட்லி!

சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை விஜய்யின் அறிமுக பாடல் மற்றும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுடன் தொடங்கினர்.

அடுத்தக்கட்ட சீனாவில் நடைபெறவுள்ளது. இதற்காக விரைவில் விஜய்யுடன் சமந்தாவும் சீனாவுக்கு புறப்பட உள்ளார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை சீனாவில் படமாக்கினார். தற்போது அவரின் உதவியாளரான இயக்குனர் அட்லியும் சீனாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் விஜய் படத்தை படம் பிடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் சமந்தா விடுதியில் தங்கி படிக்கும் காலேஜ் பெண்ணாக நடிக்கிறாராம். இவர்களுடன் எமி, பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.