சிவகார்த்திகேயனுடன் இணையும் அட்லி!


சிவகார்த்திகேயனுடன் இணையும் அட்லி!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் ‘எந்திரன்மற்றும் நண்பன்ஆகிய இரு படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. இதனைத் தொடர்ந்து ‘ராஜா ராணிஎன்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார் அட்லி. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க விஜய்யின் அடுத்த படத்திற்கு இயக்குனர் ஆகிவிட்டார். தற்போது விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் வேலைகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே சின்னத்திரையில் சிவகார்த்திகேயன் இருக்கும்போதே அட்லிக்கு பழக்கமாம். எனவே நண்பர்களாக பழகிய இவர்கள் தற்போது ஒரு புதிய படத்திற்காக இணையவுள்ளார்கள். அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.  அன்று முடியாமல் போன இவர்களது கூட்டணி தற்போது இணையவுள்ளதாம்.

தற்போது விஜய்யை இயக்கிவரும் அட்லி அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன்பிறகுதான் அட்லி இயக்கும் படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.