வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் அட்லி!


வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் அட்லி!

‘காக்கா முட்டை’ தேசிய விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் வெற்றிமாறன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணையவுள்ளனர். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘உதயம் NH4’ உள்ளிட்ட படங்களுக்காக இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

தற்போது ‘டார்லிங்’, ‘பென்சில்’, படங்களை தொடர்ந்து ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா, சிம்ரன், ப்ரியா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இதனையடுத்து ஜி.வி. பிரகாஷ் ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைக்க, வசனங்களை எழுதுகிறார் அட்லி. இப்படத்தினை அறிமுக இயக்குனர்கள் சங்கர் மற்றும் குணா இயக்கவிருக்கின்றனர்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.