மீண்டும் ‘ராஜா ராணி’ கூட்டணி… ‘தெறி’க்க விடுவாரா அட்லி..?


மீண்டும் ‘ராஜா ராணி’ கூட்டணி… ‘தெறி’க்க விடுவாரா அட்லி..?

ஒரே படம் ஓஹோ வாழ்க்கை… இது மற்றவர்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ‘ராஜா ராணி’ படப்புகழ் அட்லிக்கு பக்காவாக பொருந்தும். தனது அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

தெறி படத்தை அடுத்து, இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஆகியோர் பணியாற்றவிருக்கிறார்கள்.

இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏஆர் முருகதாஸ் தயாரிக்கிறார். இவர்கள் அனைவரும் ‘ராஜா ராணி’ படத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஹீரோவாக நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.