ரஜினிமுருகனுக்கும் ரஜினி மகளுக்கும் நன்றி தெரிவித்த அட்லி..!


ரஜினிமுருகனுக்கும் ரஜினி மகளுக்கும் நன்றி தெரிவித்த அட்லி..!

விஜய் நடித்து அட்லி இயக்கியுள்ள தெறி படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து விஜய்க்கும், அட்லிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

தனுஷ், சிவகார்த்திகேயன், சிபிராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரஜினி மகள் சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் ட்விட்டரில் தங்களை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வாழ்த்தியவர்களுக்கு இயக்குனர் அட்லி நன்றி தெரிவித்துள்ளார்.