தெறி மகிழ்ச்சியில் தன் அடுத்த படத்தையும் முடித்த அட்லி..!


தெறி மகிழ்ச்சியில் தன் அடுத்த படத்தையும் முடித்த அட்லி..!

ராஜா ராணி மற்றும் தெறி என அதிரடியான ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி.

இதனைத் தொடர்ந்து இவர் யார் படத்தை இயக்கப்போகிறார்? என கோலிவுட்டே எதிர்பார்த்த நிலையில், திடீரென “ஏ ஃபார் ஆப்பிள்’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் பெயரில் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் மூலம் ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி, தம்பிராமையா, இளவரசு, கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் அக்ஷரா கவுடா நடித்து வருகின்றனர்.

ராதா இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.