ரஜினியுடன் நடித்துவிட்டார்.. அரசியலுக்கு தயாராகும் ‘அட்டக்கத்தி’ தினேஷ்..!


ரஜினியுடன் நடித்துவிட்டார்.. அரசியலுக்கு தயாராகும் ‘அட்டக்கத்தி’ தினேஷ்..!

அட்டக்கத்தி தினேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன் புதிய படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

‘அண்ணனுக்கு ஜே’ என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கிறார். அரசியல் கதைக்களமான இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம் தினேஷ்.

வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இயக்கவுள்ள இப்படத்தில் மஹிமா நம்பியார், ராதாரவி, மயில்சாமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் திருவண்ணாமலையில் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு அங்கு நடைபெறவுள்ளது.

தினேஷ் நடிப்பில் ‘ஒரு நாள் கூத்து’ மற்றும் ‘உட்குத்து’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.