சிம்புவுடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்… இணையத்தை கலக்கும் படம்..!


சிம்புவுடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்… இணையத்தை கலக்கும் படம்..!

தன் 50வது படமான தெறி, வசூல் வேட்டையை கிளப்பி வருவதால் ஜி.வி. பிரகாஷ் உற்சாகத்தில் இருக்கிறார்.

இப்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் புரூஸ் லீ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் கீர்த்தி கர்பன்டா, ராஜேந்திரன், பால சரவணன், ராம்தாஸ், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென சிம்பு விசிட் அடித்துள்ளார் சிம்பு. இவர் தாடியுடன் காக்கி சட்டை அணிந்து அங்கே வந்திருந்தார்.

கௌதம் மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பும் அதே தளத்தில் நடந்து வருவதால் இரு நாயகர்களும் சந்தித்துள்ளனர்.

எனவே, இவர்கள் சந்தித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.