ரஜினிக்காக காத்திருந்த சிம்பு… இதோ வந்துட்டார்ல…!


ரஜினிக்காக காத்திருந்த சிம்பு… இதோ வந்துட்டார்ல…!

பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் நாளை கணக்கிட்டே மற்ற நடிகர்களின் படங்களை தயாரிப்பாளர்கள் திரையிட்டு வருகின்றனர்.

அதிலும் ரஜினி நடித்துள்ள கபாலி படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் கபாலி படத்தின் பாடல்கள் ஜுன் 10ஆம் தேதியும் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி ஜுலை 1ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது உறுதி செய்துள்ளனர்.

ஏஆர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஜுன் 17ஆம் தேதியும் இப்படத்தை ஜுலை 15ஆம் தேதியும் வெளியிட இருக்கிறார்களாம்.