கருணாவே காலை வாரிய மர்மம்?? திகைக்கும் விக்ரம்…


கருணாவே காலை வாரிய மர்மம்?? திகைக்கும் விக்ரம்…

டைரக்டர் முருகதாஸின் உதவியாளராய் இருந்த ஆனந்த் சங்கருதான் ‘அரிமா நம்பி’ படத்தை எடுத்தாரு. இவரை இயக்குனராக அறிமுகப்படுத்தியதே சாட்சாத் கலைப்புலி தாணுதான்.

இவரோட பேனர்ல வர்ற படங்கள் எப்பவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்போ ‘அரிமா நம்பி’யை விட்டு விடுவாரா என்ன? இதையும் அப்படித்தான் எடுத்தாரு. சொல்லப்போனா விக்ரம் பிரபு நடிச்ச படங்களிலேயே கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம்னா அது இதான்.

படத்தின் விளம்பரமே படத்திற்கு ப்ளஸ் பாண்ட்டாக அமையப்போக படமும் டெக்னிக்கலாக பேசப்பட்டது. சரி. அந்த டைரக்டருக்கே இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமேன்னு நினைச்சு விக்ரமுக்கு கதை சொல்ல ஏற்பாடு செய்தார் தாணு. கதை கேட்ட விக்ரம் உடனே ஓகேவும் சொல்லிட்டார்.

இதைக் கேள்விப்பட்ட ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ கருணாமூர்த்தி செம டென்ஷனாகி,. ‘பீமா’ படத்துல நடிச்சிட்டு இருக்கும்போதே கருணாமூர்த்திகிட்ட ஒரு தொகைய அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் விக்ரம். ஆனா படம் நடிச்சி கொடுக்காம இழுத்தடிச்சி இருக்காரு.

அதனால தயாரிப்பாளர் சங்கத்தில் கருணாமூர்த்தி புகார் கொடுக்க ‘மர்ம மனிதன்’ படம் இவருக்கு வந்துவிட்டது.

ஆனால் அண்மையில வந்த ‘10 எண்றதுக்குள்ள’ படம் படு தோல்வியடைஞ்சத்தால ‘மர்ம மனிதன்’ படமே வேண்டாம் என ஓடியிருக்கிறார் கருணா. இந்த வேணும் வேண்டாம் விளையாட்டில் கொஞ்சம் திகைத்துத்தான் போனார் விக்ரம்.

பின்புதான் கைகொடுத்திருக்கிறார் ‘புலி’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம். ’மர்ம மனிதன்’ படத்தை அவர் தயாரிக்கவிருக்கிறார்.

விக்ரமின் தொடர் ப்ளாப்பினால் தயாரிப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. பார்ப்போம் தமீமாவது தம் கட்டுகிறாராவென..