500 கோடியை வசூலித்த ‘பாகுபலி’க்கு ஆஸ்கர் விருது?


500 கோடியை வசூலித்த ‘பாகுபலி’க்கு ஆஸ்கர் விருது?

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ அதிரடி சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் 150 கோடி வசூலை எட்டியது. இரண்டு வாரத்தில் 400 கோடி வசூலை எட்டியது. இதற்கு முன்பு ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவான ‘எந்திரன்’ படம்தான் முதலிடத்தில் இருந்தது. அதனை முறியடித்து வெற்றி நடை போட்டு வருகிறான் பாகுபலி.

தற்போது வெளியாகி 4 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் ‘பாகுபலி’ 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது தென்னிந்தியாவின் 500 கோடி கிளப்பில் இடம் பிடித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதற்கு முன்பு இந்தியளவில் 500 கோடி மேல் ஒரு சில இந்திப்படங்கள் வசூல் செய்துள்ளது. அமீர்கானின் ‘தூம்-3’, ‘பி.கே’ மற்றும் சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ ஆகிய படங்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த பலரும் ஆஸ்கருக்கு இப்படத்தை பரிந்துரைக்கலாம் என கூறி வருகின்றனர். இப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதால் ஆஸ்கர் அவார்ட் நிச்சயம் என்கின்றனர். ஆனால் இயக்குனர் ராஜமௌலியோ விருதை பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை என்கிறார்.

இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கிய நான் ஈ படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியிருந்தது நாம் அறிந்ததே.