ராணாவின் ஜோடி யார்? பாகுபலியில் நடக்கும் மல்லுக்கட்டு?


ராணாவின் ஜோடி யார்? பாகுபலியில் நடக்கும் மல்லுக்கட்டு?

2015ஆம் ஆண்டு இந்தியா முழுக்க ரூ. 550 கோடிகளை வெகு சாதாரணமாக ஈட்டிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

உருவாகவிருக்கும் இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவின் காதல் காட்சிகள் அதிகமாக வைத்து எடுக்க உள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

போதாதற்கு ராணாவுக்கும் ஜோடி சேர்க்கிறார்கள். ஸ்ரேயாவை இழுத்துப் போட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதைக் கேள்விப்பட்ட ராணாவின் ஆஸ்தான நாயகி தான் இடம் பெற முட்டி மோதிவருகிறார்.

பார்ப்போம் வெற்றி யாருக்கென்று?