5 ஹீரோக்கள் இணையும் படத்தை பாலா தொடங்குவது எப்போது..?


5 ஹீரோக்கள் இணையும் படத்தை பாலா தொடங்குவது எப்போது..?

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள பிரம்மாண்டமான படம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வந்தது.

ஆனால் அதன்பின்னர் அது பற்றிய பேச்சே இல்லாமல் போனது.

இதில் ஐந்து ஹீரோக்கள் இணைந்து நடிப்பதால் அவர்களது கால்ஷீட் தொடர்பான தேதிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

எனவே, இப்படத்தை 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அர்விந்த்சாமி, விஷால், ஆர்யா, ராணா, அதர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் நாயகிகள் மற்றும் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.