இளையராஜாவின் பாராட்டு விழாவை ரத்து செய்த பாலா!


இளையராஜாவின் பாராட்டு விழாவை ரத்து செய்த பாலா!

அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை இளையராஜாவிற்கான பாராட்டு விழாவாக நடத்தி காட்டினார் இயக்குனர் பால்கி. அவ்விழாவில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அவ்விழாவின்போதே ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு ஏன் தமிழகத்தில் பாராட்டு விழா நடத்தப்படவில்லை என்ற பேச்சு எழுந்தது.

இந்நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தாரை தப்பட்டை’ படமே இளையராஜாவின் 1000வது படம் என்பதால் அதற்கான இசை வெளியீட்டு விழா பாராட்டு விழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே இசையின் ரசிகர்களும் அந்த இனிய நாட்களுக்காக காத்திருந்தனர்.

ஆனால், பாராட்டு விழாவை ரத்து செய்துவிட்டு இசை வெளியீட்டு விழாவை மிக எளிமையாக நடத்தவிருக்கிறார்களாம். இதற்கு சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய கனமழை வெள்ளமே காரணம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை இன்னும் முழுமையாக மீளாத பட்சத்தில் விழா எடுப்பது முறையல்ல என்று இளையராஜாவும் இயக்குனர் பாலாவும் முடிவு எடுத்ததால் விழாவை ரத்து செய்து விட்டார்களாம்.