ADMK பெயர் மாற காரணம் என்ன? கன்ப்யூஸ் ஆகும் கண்மணிகள்.!


ADMK பெயர் மாற காரணம் என்ன? கன்ப்யூஸ் ஆகும் கண்மணிகள்.!

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தை அஞ்சலி மேனன் இயக்கியிருந்தார். இதில் துல்கர், நிவின் பாலி, பஹத் பாசில், நஸ்ரியா, நித்யா மேனன், பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2014ஆம் ஆண்டு வெளியான இப்படம் அந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய கேரள அரசின் விருதுகளை தட்டிச் சென்றது.

தற்போது ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா, ராணா, ராய்லட்சுமி, பார்வதி, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தமிழில் உருவாகி வருகிறது.பொம்மரிலு பாஸ்கர் இயக்க கோபிசுந்தர் இசையமைத்து வருகிறார். பிவிபி சினிமா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் இடம்பெற்றுள்ள முக்கிய கேரக்டர்களின் பெயர்களை கொண்டு இப்படத்தின் டைட்டில் வைக்கப்பட்டது. ‘அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்தி’ என தலைப்பிட்டு இருந்தனர். இந்த டைட்டிலை சுருக்கி ADMK என்றும் அழைத்தனர்.

தற்போது படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பை ‘பெங்களூர் நாட்கள்’ என்று மாற்றி பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.ADMK என்ற பெயரில் படம் வெளியானால் அரசியல் பிரச்சினை வரும் என்பதால் தற்போது மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை மற்ற கட்சிகள் தொண்டர்கள் வரமாட்டார்கள் என்பதால் படத்தின் பெயரை மாற்றியிருப்பார்களோ? என்ற பேச்சும் ரசிக கண்மணிகளிடம் எழுந்துள்ளது.