‘ஆர்யா எப்பவும் பொண்ணுங்க கூடத்தான் நிப்பாரு.’. ரோபோ சங்கர்


‘ஆர்யா எப்பவும் பொண்ணுங்க கூடத்தான் நிப்பாரு.’. ரோபோ சங்கர்

மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கிய ‘பெங்களூர் டேஸ் ‘ படம் மாபெரும் வெற்றி அடைந்தது. 2014ஆம் ஆண்டு வெளியான இப்படம் அந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய கேரள அரசின் விருதுகளை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழில் இப்படத்தை ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா, ராணா, ராய்லட்சுமி, பார்வதி, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க பாஸ்கர் இயக்கி வருகிறார். கோபிசுந்தர் இசையமைக்க பிவிபி சினிமா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பின்னர் படக்குழுவினர் ஒன்றாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதில் நடிகைகள் ஸ்ரீதிவ்யா, பார்வதி ஆகியோர் அருகில் ஆர்யா நின்றார். இவருக்கு அடுத்து ராணா, பாபி சிம்ஹா நின்றனர்.

இந்த புகைப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது… “நம்ம ஆர்யா தம்பி மட்டும் எப்பவும் பொண்ணுங்க கூடத்தான் போட்டோ எடுப்பாரு. நல்ல தம்பி” என்று கிண்டலாக கூறியுள்ளார்.