பீப் சாங் ப்ராப்ளம்… போலீசார் முன்பு ஆஜரானார் சிம்பு..!


பீப் சாங் ப்ராப்ளம்… போலீசார் முன்பு ஆஜரானார் சிம்பு..!

சிம்பு பாடி இணையத்தில் வெளியான பீப் சாங் பல சர்ச்சைகளை உண்டாக்கியது. எனவே பல்வேறு பெண்கள் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த பாடலில் தொடர்புடைய அனிருத் கடந்த மாதம் கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் சிம்பு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், சிம்பு சார்பாக அவரது தந்தை டி. ராஜேந்தர் நேற்று கோவை சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜை சந்தித்து வழக்கு குறித்து விளக்கம் கேட்டார்.

எனவே, இன்று காலை கோவை காட்டூர் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சிம்பு ஆஜரானார். சிம்புவின் வருகை அறிந்ததும் ரசிகர்கள் அங்கு திரண்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.