அஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..?


அஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..?

தற்போதைய சினிமாவை நடிகர், நடிகைகளின் வாரிசுகள் கலக்கி கொண்டிருக்கின்றனர்.

சீனியர் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோ, ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்க, சீனியர் நடிகைகளின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.

நடிகை மீனாவின் மகள் நைனிகா தெறி படத்தில் விஜய்யுடன் நடித்த, தமிழகத்தின் செல்ல பேபியாக மாறிவிட்டார்.

இந்நிலையில், பிரபல பத்திரிகை ஒன்று எந்த குழந்தை நட்சத்திரம் உங்களை கவர்ந்துள்ளது? என்று கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

அதில் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்த நைனிகா, என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா மற்றும்

தங்க மீன்கள் படத்தில் ராமின் மகளாக நடித்த சாதனா ஆகிய குழந்தைகள் இடம் பெற்றுள்ளனர்.

அந்த சர்வேயின் முடிவுகள் இதோ…

  • தெறி நைனிகா – 44.1%
  • என்னை அறிந்தால் அனிகா – 38.9%
  • தெய்வ திருமகள் சாரா – 13.3%
  • தங்க மீன்கள் சாதனா – 3.7%

இதில் விஜய்யின் மகளாக நடித்த நைனிகா முதல் இடம் பெற்றுள்ளார்.